பதற்ற நிலையை குறைப்பதற்காக ஒன்றிணைந்த அமெரிக்க – சீனத் தலைவர்கள்
அமெரிக்க – சீனத் தலைவர்கள் நீண்ட காலத்தின் பின்னர் இரு நாட்டுக்கும் இடையிலான பதற்ற நிலையைக் குறைப்பதற்கு உறுதியளித்துள்ளனர்.
சான் பிரான்ஸிஸ்கோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் , சீன அதிபர் சி சின்பிங்கும் சந்தித்தனர்.
சுமார் ஓராண்டுக்குப் பிறகு இருவரும் முதல்முறையாக நேரில் சந்தித்துள்ளனர். இருதரப்புக்கும் இடையிலான விரிசல், மோதலாக மாறிவிடக்கூடாது என்று பைடன் கூறினார்.
அமெரிக்க-சீன இருதரப்பு உறவு உலகிலேயே மிக முக்கியமானது எனத் சீ வருணித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் புறக்கணிக்க முடியாது என்றார் அவர்.
தைவான், வர்த்தகம், மத்திய கிழக்கு, உக்ரேன் போர், பருவநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில் இருதரப்புக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
பல மாத அரசதந்திர முயற்சிக்குப் பிறகு இரு தலைவர்களும் சந்தித்துள்ளனர்.
(Visited 16 times, 1 visits today)