காசா வைத்தியசாலையில் எரிபொருள் பற்றாக்குறை – 200 பேர் உயிரிழப்பு
காசாவில் உள்ள பிரதான வைத்தியசாலையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசா நகரம் உள்ளிட்ட காசாவின் பல பகுதிகளில் ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் இடையேயான மோதல் தொடர்கின்றது.
இந்தநிலையில் ஹமாஸ் தரப்பினரின் நாடாளுமன்றம் மற்றும் நகரத்தில் உள்ள ஏனைய கட்டடங்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
அத்துடன் வடக்கு காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் தரப்பினர் இழந்து விட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் உள்ள பிரதான வைத்தியசாலையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 200 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் அல்-ஷிபா வைத்தியசாலையில் ஹமாஸ் தரப்பினரின் கட்டளை மையம் இயங்குவதாக உளவுத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் ஹமாஸ் தரப்பினர் இதனை மறுத்துள்ளனர்.
(Visited 6 times, 1 visits today)