செய்தி

நாடு முழுவதும் 14,225 கட்டிடங்கள் நிலச்சரிவு அபாயத்தில் உள்ளன

நாடளாவிய ரீதியில் 14,225 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்சரிவு அபாயத்தில் உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் மண்சரிவு மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட பொறியியல் புவியியலாளர் லக்சிறி இந்திரஜித் தெரிவித்தார்.

அதன்படி சுமார் 5000 வீடுகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து சுமார் 50,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாத்தறை, கண்டி, நுவரெலியா, குருநாகல், மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மண்சரிவினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான 1685 வீடுகளின் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி