நேபாளத்தில் டிக்டொக் செயலிக்கு தடை
நேபாளத்தில் டிக்டொக் (TikTok) செயலி தடை செய்யப்பட்டுள்ளது.
நேபாளத்தில் சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது தொடர்பு அலுவலகங்களை நிறுவ வேண்டும் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தபட்டு சில நாட்களில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் டிக்டொக் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக தெரிவித்து எத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாதாந்தம் ஒரு பில்லியன் பயனாளர்களை கொண்டுள்ள டிக்டொக் செயலி இந்தியா உட்பட பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 1,600க்கும் மேற்பட்ட டிக்டாக் தொடர்பான சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
(Visited 11 times, 1 visits today)