ரஷ்யாவும், சீனாவும் வடகொரியாவுக்கு ஆதரவாக உள்ளன : அமெரிக்கா குற்றச்சாட்டு!
ரஷ்யாவும், சீனாவும் வட கொரியாவிற்கு பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க உதவுகின்றன என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் “முற்றிலும் ஆதாரமற்றவை” என்று கிரெம்ளின் கூறியுள்ளது.
முன்னதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் சியோலில், சீனாவும் ரஷ்யாவும் ஐக்கிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதன் மூலம் வட கொரியாவின் இராணுவத் திறனை விரிவுபடுத்த உதவுவதாகக் கவலை தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கிரெம்ளின், ரஷ்யா தனது சொந்த நலன்களுக்காக செயல்படுகிறது என்று கூறியது.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களுடனான தினசரி மாநாட்டு அழைப்பில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் எரிபொருள் மற்றும் எரிசக்தி வளாகம் குறித்து செவ்வாயன்று ஒரு கூட்டத்தை நடத்துவார் என்று கூறினார்.
இதேவேளை ரஷ்ய எண்ணெய் மீதான மேற்கத்திய தடைகளை மீறியதாக சந்தேகிக்கப்படும் 100 கப்பல்கள் பற்றிய தகவல்களைக் கோரி கப்பல் நிர்வாக நிறுவனங்களுக்கு அமெரிக்க கருவூலத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.