அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறிய கருத்துக்கு மறுப்பறிக்கை
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில துணை செயலாளரும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யூ.சி.யின் மாநில தலைவரும்மானமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.பெரியசாமி
அவர்கள் சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைதுறை மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறிய கருத்துக்கு மறுப்பறிக்கையை வன்மையாக மறுக்கிறோம்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் , டாஸ்மாக் தொடர்பான ஒரு விவாதத்தில் தலையிட்டு,டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபானங்கள் கொள்முதல் – விற்பனை- அரசுக்கு வரும் வருமானம் குறித்து அனைவரும் ஏற்கதக்க ஒரு விளக்கம் அளித்துள்ளார். இதனை புரிந்து கொள்ள முடிகிறது.
நிதியமைச்சரின் தலையீட்டை தொடர்ந்து மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் மின்துறை அமைச்சர் தலையிட்டு மேலும் விளக்கம் என்ற முறையில் பணியாளர்கள் மீதும், தொழிற்சங்கங்கள் மீதும் அப்பட்டமாக பழி சுமத்தும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
டாஸ்மாக் பணியாளர்களில் விற்பனையாளர்களும், மேற்பார்வையாளர்களும் பாட்டிலுக்கு ரூ10 க்கு மேல் கூடுதல் விலைக்கு விற்பதாகவும், இவர்கள் மீது அபதாரம் விதித்து ரூ 5 கோடி வசூலித்துள்ளதாகவும் பெருமை பொங்கக் கூறியதுடன்,
தவறுகளை முழுமையாக தடுக்க முடியாமல் தொழிற்சங்கங்கள் நுழைந்து, தடை செய்கின்றன என்ற நோக்கில் விளக்கம் அளித்து, தொழிற்சங்கங்கள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக கழக அரசுக்கும், அதன் சீரிய தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் அரசுக்கும் ஆதரவு தருவது மட்டும் அல்ல, அதனை பாதுகாத்து நிற்கும் அரணாகவும் டாஸ்மாக் பணியாளிகள் இருந்து வருவார்கள் என்பதை திரு வி செந்தில் பாலாஜி தெரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக டாஸ்மாக் பணியாளர்கள் செக்கில் போடப்பட்ட பொருள் போல் ஆட்டிப் பிழிந்து எடுக்கப் படுகிறார்கள்.கரூர் கம்பனி என்ற பெயரில் யாரோ சமூக விரோதிகள், . சட்டவிரோதமாக பாட்டிலுக்கு இவ்வளவு என பேரம் பேசி வசூலித்து வருகிறார்கள்.
காலனி ஆட்சிக்கு முன்னர் கிழக்கிந்திய கம்பனியார் பாளையக்காரர்களிடம் கப்பம் வசூலித்ததை வரலாற்றில் படிக்கிறோம்.
கரூர் கம்பனியார் டாஸ்மாக் கடைகள் தோறும் கப்பம் வசூலிக்க மாவட்ட வாரியாக முகவர்கள் நியமிக்கப் பட்டிருப்பதை மதுவிலக்கு அமைச்சர் திரு வி. செந்தில் பாலஜி அறிந்துள்ள செய்தி என ஒரு போதும் கூறவில்லை.
மாண்புமிகு அமைச்சரே, பல நேர்வுகளில் கரூர் கம்பனி என்பது யார்? அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்கள்.ஒரு நேர்வில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கவனத்திற்கு நேரில் கொண்டு சென்ற போது, அவர் மிகத்தெளிவுபடக் கூறினார்.
மாண்புமிகு அமைச்சரின் கவனித்துக்கு இதனை (கரூர் கம்பனியார்) தெரிவித்தோம். அவர் (அமைச்சர்) அப்படி யாரவது கடைகளில் சென்று, பணியாளர்களிடம் நடந்து கொண்டால்,
அவர்கள் மீது காவல்துறையில் புகார் செய்யுமாறு பணியாளர்களுக்கு கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டதாக கூறினார்.மேலாண்மை இயக்குநர் வழிகாட்டுதலை ஏற்று, சில இடங்களில் புகார் கொடுத்து, பணியாளர்கள் பணியிழப்புக்கு ஆளாகியுள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் , ஒரு குறிப்பிட்ட தொழிற்சங்க தலைவரை குறிவைத்து, பழிவாங்கும் பகடை காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.அவரிடம் நாங்கள் (கரூர் கம்பனியார்) நேரில் பேச மாட்டோம். அவரிடம் தற்போதைக்கு வசூலும் செய்ய மாட்டோம்.
அவர் டாஸ்மாக் பணியில் நீடிக்க முடியாது. நீங்கள் (அவர்கள் பேசும் பணியாளர்கள்) என்ன சொல்கிறீர்கள்? பாட்டிலுக்கு மற்ற பகுதிகளில் இவ்வளவு வாங்குகிறோம். நீங்கள் வேண்டுமானால் கொஞ்சம் குறைத்துக் கொடுங்கள் என்று பேரம் பேசப்பட்டது.
இது பற்றியெல்லாம் மாண்புமிகு அமைச்சர் அவர்களை சந்தித்துப் பேசலாம் என்று முயலும் போது அண்ணா, செவ்வாய் முதல் வியாழன் வரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று தேனினும் இனிய குரலில் பதில் தருகிறார்.
அவரிடம் நரம் கேட்க அவர் தொடர்பான அலைபேசிகளில் தொடர்பு கொள்ளும் போது ஒன்று ( No Answer ஆகிகிறது. அல்லது வேரொடு இணைப்பில் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டுமே பதிலாகிறது.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் மாண்புமிகு அமைச்சர் தொழிற்சங்ககள் மீது பழி சுமத்தி பேசுவதை வன்மையாக மறுக்க வேண்டியது கடமையாகிறது.அமைச்சர் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது.