பணத்தை ஏமாற்றும் புதிய முறை – பொலிஸார் வெளப்படுத்திய தகவல்
உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பணம் மோசடி செய்த வழக்குகள் குறித்து புகார்கள் வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான பல மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,
‘விபத்து ஏற்பட்டுள்ளது, சிகிச்சைக்கு பணத்தை உடனடியாகக் கணக்கில் வைப்பிலிடுங்கள். கடத்தல்காரர்கள் மக்களை ஏமாற்றி பலவித ஏமாற்றங்களுக்கு இட்டுச் செல்லும் சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு அழைப்பெடுத்துள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இது சில குழுவினரால் செய்யப்பட்டுள்ளது.
பிள்ளைகள் பாடசாலையில் படிக்கும் போது விபத்துக்குள்ளாகி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைக்கு செலுத்த வேண்டும் என தெரிவித்து, வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடுமாறு கூறப்படுகின்றது.
இதன்போது பெற்றோர்கள் பதற்றத்தில் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிடுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.