ஜெர்மனியில் கடும் நெருக்கடியான நிலை – பொலிஸார் அதிரடி நடவடிக்கை
ஜெர்மனியில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்து வருவதால் கடும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாடானது காசா நகர் மீது பாரிய குண்டு வீச்சு தாக்குதலை நடத்தி வருவதுடன் காசா நகரில் வாழும் அப்பாவி மக்கள் இந்த தாக்குதலால் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் பல இடங்களில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை ஜெர்மனி நாட்டிலும் பல இடங்களிலும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறிப்பாக பேர்ளின், எஸன், டுசில்டோ மற்றும் கொலோன் போன்ற பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக தெரியந்துள்ளது.
பேர்ளினில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 15000க்கு மேற்ப்பட்டோர் கலந்து கொண்டதாகவும்,
எஸன் நகரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்குப்பற்றியதாகவும் தெரியவந்து இருக்கின்றது.