சூலூரில் நடந்த சாலை விபத்தில் இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்
கோவை சூலூர்
சூலூரில் நடந்த சாலை விபத்தில் இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்
கோவை மாவட்டம் சூலூர் எல்அன்டி பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் காரில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்
சூலூர் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்கதிரேசன் மகன்அகிலன்( 25) மற்றும் சூலூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஷால்(23) இருவரும் நண்பர்கள். நேற்று இரவு இவர்கள் இருவரும் அகிலனுக்கு சொந்தமான காரில் எல்என்டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டு இருந்துள்ளனர்.காரை அகிலன் ஓட்டியுள்ளார்.
அப்போது பட்டணம் பிரிவு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதால் நிலை தடுமாறிய காரின் ஓட்டுனர் அகிலன் காரை நிறுத்தமுடியாமல் லாரியின் பின்புறத்தில் பலமாக மோதி கார் நின்றுள்ளது. இதில் லாரியில் சிக்கிய காரின் முன் பக்கம் சுக்கு நூறாக நொறுங்கியது.
விபத்து ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்று விட்டது நொறுங்கிய காருக்குள் சிக்குண்ட அகிலன் மற்றும் விஷால் துடிதுடித்தபடி இருந்துள்ளனர் உடனடியாக அருகில் இருந்தவர்கள் கடப்பாரை மற்றும் இரும்பு ராடு ஆகியவர்களை கொண்டு காரை உடைத்து அதற்குள் இருந்த இருவரையும் மீட்டுள்ளனர். இருவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் ஆனால் வழியிலேயே இருவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தொடர்ந்து எல்என்டி பைபாஸ் சாலையில் விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு லாரிகளை நிறுத்தாமல் செல்வது வாடிக்கையாகிவிட்டது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று விபத்துகளில் ஐந்து பேர் இறந்துள்ள நிலையில் மூன்று லாரிகள் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது .
விபத்து ஏற்படுத்திவிட்டு உயிரிழப்பையும் ஏற்படுத்தி விட்டு சென்ற மூன்று லாரிகளை கண்டுபிடிக்க சூலூர் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு லாரியையும் அதன் ஓட்டுனர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். விபத்தில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.