குறைப்பட்ட யுரேனிய பயன்பாடு விவசாயத்துறையின் அழிவுக்கு வழிவகுக்கும் – ரஷ்யா!
உக்ரைனில் குறைக்கப்பட்ட யுரேனியம் குண்டுகளைப் பயன்படுத்துவது உக்ரேனிய துருப்புகளுக்கும், பரந்த மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
குறைந்த யுரேனியம் கொண்ட குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க பிரித்தானியா இணக்கம் தெரிவித்த நிலையில், ரஷ்யா இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளது.
இதன்படி இந்த வகையான குண்டுகளை பயன்படுத்துவதன் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு விவசாயத்துறை பாதிக்கப்படும் எனவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவர் இகோர் கிரில்லோவ், குறைக்கப்பட்ட யுரேனியம் வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதனால் எவ்வாறான விளைவுகள் நேரும் என்பது மேற்குலக நாடுகளுக்கு நன்கு தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.