இஸ்ரேல் பாலஸ்தீன போர்: மனிதாபிமான அடிப்படையில் நிறுத்துமாறு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு
காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன குழுக்களுக்கும் இடையிலான சண்டையை மனிதாபிமான அடிப்படையில் நிறுத்துமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்,
பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தவிர்க்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாரிஸில் காஸாவுக்கான உதவிகள் குறித்த மாநாட்டில் பேசிய மக்ரோன், பயங்கரவாதத்தை “விதிகள் இல்லாமல்” நடத்த முடியாது என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் விமானத் தாக்குதல்களால் 4,400 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 10,812 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 8 times, 1 visits today)