உலக நாடுகள் முழுவதும் பரவும் காசா – இஸ்ரேல் மோதல்!

காஸா பகுதியில் நிலவி வரும் ஹமாஸ்-இஸ்ரேல் மோதல்கள் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மிக நெருக்கமான சம்பவம் ஒன்று இன்று (10.11) கனடாவின் Montreal இல் பதிவாகியுள்ளது. அந்தப் பகுதியில் அமைந்துள்ள இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த வார தொடக்கத்தில், மாண்ட்ரீலில் உள்ள யூத மத மையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
மேலும், நகரில் உள்ள கான்கார்டியா பல்கலைக்கழகத்தில், பாலஸ்தீன ஆதரவு குழுக்களுக்கும், இஸ்ரேல் ஆதரவு குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
(Visited 20 times, 1 visits today)