சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக 163 முறைப்பாடுகள்!
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக 163 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக வேலைசெய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலேயே இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அதாவது 2018 முதல் இந்த ஆண்டு அக்டோபர் 18 வரை மேற்கண்ட எண்ணிக்கையில் முறைப்பாடுகள் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
அவர்கள் சட்டவிரோத வெளிநாட்டு விநியோக ஓட்டுனர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை மனிதவள அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக குறிப்பிட்டார்.
அந்த முறைப்பாடுகளுக்கு எதிராக நடத்திய விசாரணைகளில் பெரும்பாலானவை சாட்சியம் இல்லாதது என்றும் கூறப்பட்டுள்ளது. அதில் வெறும் 10 வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக மட்டுமே அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)