உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக நடந்தே செல்லும் பாலஸ்தீனர்கள்
ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் போரிலிருந்து தப்பிச் செல்வதற்காக நடந்தே வெளியேறியிருக்கின்றனர்.
காஸா வட்டாரத்தின் தென் முனைக்கு இவர்கள் வெளியேறியுள்ளனர். சுமார் 50,000 பொதுமக்கள் வட பகுதியிலிருந்து வெளியேறினர்.
முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை 3 மடங்கு அதிகமாகும். வாரயிறுதியிலிருந்து ஒவ்வொரு நாளும் சுமார் 4 மணிநேரத்துக்கு மனிதாபிமான பொருள்களைக் கொண்டுசெல்லும் பாதை திறந்துவிடப்படுகிறது.
அதன்வழி மக்கள் வெளியேறுகின்றனர். இந்நிலையில், இஸ்ரேல், ஹமாஸ் படையின் சுரங்கங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துகிறது.
இதுவரை 130 சுரங்கங்களைத் தகர்த்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. நிலத்தடியில் உள்ள ரகசியப் பாதைகளைத் தகர்த்து ஹமாஸ் அமைப்பை முற்றிலும் துடைத்தொழிக்க இஸ்ரேல் முற்படுகிறது.
(Visited 12 times, 1 visits today)





