பூனைகள் தொடர்பில் ஆய்வில் வெளிவந்த அபூர்வ தகவல்
பூனைகள் தொடர்பில் ஆய்வில் அபூர்வ தகவல்கள் பல வெளியாகியுள்ளது.
மகிழ்ச்சி… சினம்… சோகம்… ஏமாற்றம்… போன்ற உணர்வுகளை மனிதர்கள் தங்களின் முக பாவனைகளில் காட்டுவது போல் பூனைகளும் காட்டுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதே போல வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள், மற்ற பூனைகளைச் சந்திக்கும்போது உணர்வுகளை முக பாவனைகளில் வெளிப்படுத்துகின்றன.
பூனைகள் மற்ற பூனைகளுடன் தொடர்புகொள்ளும்போது 276 வெவ்வேறு விதமான முக பாவனைகளைக் காட்டுவதை அமெரிக்காவைச் சேர்ந்த 2 விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
Behavioural Processes எனும் சஞ்சிகை வெளியிட்ட ஆய்வில் அந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தது.
பூனைகள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ளும் விதம், முன்பு நினைத்ததைவிட மிகச் சிக்கலானது என்பதை ஆய்வு காட்டியதாக விஞ்ஞானிகளில் ஒருவர் கூறினார்.
முக பாவனைகளைக் காட்டும் திறனை மனிதர்களுடன் வீட்டில் இருக்கும் பூனைகள் வளர்த்துக்கொண்டிருக்கலாம் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
வருங்காலத்தில் பூனைகளின் முக பாவனைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள ஆய்வு நடத்த விரும்புவதாக விஞ்ஞானிகளில் ஒருவர் கூறினார்.