ஜப்பானில் எரிமலை வெடிப்பால் உருவான புதிய தீவு!
ஜப்பான் ஐயோடோ என்று அழைக்கும் ஐவோ ஜிமாவின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் (அரை மைல்) தொலைவில் அமைந்துள்ள பெயரிடப்படாத கடலுக்கடியில் கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி எரிமலை, வெடித்தது.
10 நாட்களுக்குள், எரிமலை சாம்பல் மற்றும் பாறைகள் ஆழமற்ற கடற்பரப்பில் குவிந்தன, அதன் முனை கடல் மேற்பரப்பில் மேலே உயர்ந்தது.
நவம்பர் மாத்தின் தொடக்கத்தில், ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் எரிமலைப் பிரிவின் ஆய்வாளரான யுஜி உசுயியின் கூற்றுப்படி, இது 100 மீட்டர் (328 அடி) விட்டம் மற்றும் கடலுக்கு மேலே 20 மீட்டர் (66 அடி) உயரத்தில் ஒரு புதிய தீவாக மாறியதாக தெரிவித்தார்.
Iwo Jima அருகே எரிமலை செயல்பாடு அதிகரித்துள்ளதுடன், சமீபத்திய ஆண்டுகளில் கடலுக்கு அடியில் ஏற்படும் எரிமலைகளால் ஒரு புதிய தீவு உருவாகும் என எதிர்வுக்கூறியுள்ளார்.
அந்த இடத்தில் எரிமலை செயல்பாடு குறைந்து விட்டது, மேலும் புதிதாக உருவான தீவு ஓரளவு சுருங்கி விட்டது, ஏனெனில் அதன் “சிதைந்த” உருவாக்கம் அலைகளால் எளிதில் கழுவப்படுகிறது, உசுய் கூறினார்.
இது தொடர்பில் ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகின்றனர்.