ஸ்பெயினில் திடீரென கைது செய்யப்பட்ட கும்பல் – விசாரணையில் வெளிவந்த தகவல்
ஸ்பெயின் நாட்டின் பல நகரங்களில் பாகிஸ்தான் ஜிகாதிகள் என சந்தேகிக்கப்படும் 14 பேரை ஸ்பெயின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் ஜிஹாதி தீவிரவாத வலையமைப்பு இயங்கி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஸ்பெயின் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஏழு பேர் பார்சிலோனாவிலும், ஒருவர் லீடாவிலும், மற்றொருவர் மலகாவிலும், இரண்டு கிபுஸ்கோவாவிலும், இரண்டு வலென்சியாவிலும், ஒருவர் லோக்ரோனோவிலும் இருந்தனர்.
ஜிஹாதி தீவிரவாத குழுக்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு ஜிஹாதிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
(Visited 6 times, 1 visits today)