கடலில் மோதல் போக்கு ஏற்படும் அபாயம் – சீனா கடும் எச்சரிக்கை
கடல்துறை தொடர்பான சர்ச்சைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மற்ற நாடுகளுடன் சேர்ந்து கடலில் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கக்கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தமது உரையில் அவர் அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடவில்லை.
“நீண்டகாலமாக இருந்து வரும் கடல்துறை சர்ச்சைகளுக்கு நட்புமுறையுடன் தீர்வு காண வேண்டும். கடலில் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும்,” என்று ஹைனான் தீவில் நடைபெற்ற கடல்துறை கருத்தரங்கில் வாங் தெரிவித்தார்.
தென்சீனக் கடலில் சீன ஆதிக்கப் போக்குடன் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வதாக பிலிப்பீன்ஸ், ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)