குவைத்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள்
விசா இன்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 26 பேர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் ஊடாக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர்கள் அழைதது வரப்பட்டனர்.
குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்துள்ள 2000க்கும் மேற்பட்ட வீட்டுப் பணியாளர்களில் இந்தக் குழு இலங்கைக்கு வரவிருப்பதாகவும், எஞ்சிய குழுவும் பகுதிகளாக இலங்கைக்கு அனுப்பப்படுவதாகவும் தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கைத் தூதரக அதிகாரிகள் குவைத்தின் குடிவரவுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதித்துறை மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து இந்த வீட்டுப் பணியாளர்களுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறவும், அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை ரத்து செய்யவும் முயற்சி செய்துள்ளனர்.
அத்துடன், இந்த இலங்கை வீட்டுப் பணியாளர்களுக்கு இலங்கைக்கு வருவதற்குத் தேவையான விமானச் சீட்டுக்களை வழங்க குவைத் மாநிலத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது.