காசாவில் 4,324 குழந்தைகள் பலி
காசாவில் உள்ள சுகாதார அதிகாரிகளின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய குண்டுவெடிப்புகளில் குறைந்தது 4,324 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா பகுதியில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கையை தவிர, இடிபாடுகளுக்குள் சுமார் 1,350 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், காசா பகுதி குழந்தைகளின் கல்லறையாக மாறி வருகிறது என தெரிவிததுள்ளார்.
காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களால் தினமும் 160 குழந்தைகள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், காசா பகுதியின் மையப்பகுதியான காசா நகரை தற்போது தங்கள் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
காசா பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் போர் மோதல்கள், இஸ்ரேல் படைகளின் தரைவழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் தற்போது தீவிரம் அடைந்துள்ளது.
காசா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 10,300 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் 4,200 பேர் குழந்தைகள், இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவில் தினமும் 160 குழந்தைகள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அஷ்ரப் அல்-குவாத்ரா – காசா சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவில் சுமார் 4200 குழந்தைகள் இறந்துள்ளனர். 10,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.