இலங்கையில் அதிர்ச்சி – காதலிக்கு காதலன் செய்த கொடூரம்
ஹோமாகம பிரதேசத்தில் இன்று காலை 22 வயதுடைய யுவதியொருவர் கழுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியில் வசிக்கும் யுவதியே படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், காதல் உறவின் அடிப்படையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அவரது காதலன் எனக் கூறிக்கொள்ளும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இந்த கொலையை செய்துவிட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சுகயீனம் இருப்பதாகக் கூறி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(Visited 14 times, 1 visits today)





