கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து விபத்து பலர் காயம்

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று களுத்துறை, நாகொட, கல்அஸ்ஸ பிரதேசத்தில் அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஒரே திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென வலது பக்கம் நோக்கி திரும்ப முற்பட்டதில் பேருந்து வீதியை விட்டு விலகி சுவரில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சுமார் 13 பேர் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 60 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முச்சக்கரவண்டியானது அருகில் உள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
(Visited 19 times, 1 visits today)