நியூயார்க் நகர தெருக்களில் வழிந்தோடிய பச்சை நிற நீரால் மக்கள் குழப்பம்
நியூயார்க் நகர தெருக்களில் திடீரென பச்சை நிறத்தில் ஓடிய தண்ணீர் குறித்த புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக இதுபோன்று பச்சை நிறத்தில் திரவம் தெருவில் ஓடி இருக்கலாம் என கூறப்படுகிறது.
எனினும், இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் இந்த காட்சிகளை பார்த்த இணைய பயனர்கள் பலரும், இது வெப்பமயமாக்கல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் சில பயனர்கள், இவ்வாறு திரவம் தெருக்களில் ஓடுவது நிலத்தடி நீர் பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்றும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
(Visited 13 times, 1 visits today)





