செய்தி தமிழ்நாடு

NLC நிலக்கரி சுரங்கங்கத்திற்காக வேளான் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் – இராமதாஸ்!

என்.எல்.சி நிலக்கரி சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக  வேளாண் நிலங்களை பறிக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என டாக்டர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்யைில்,  என்.எல்.சி நிலக்கரி சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக போராடி வரும் கடலூர் மாவட்ட மக்களும், நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அதற்கும் கூட அதிகாரிகள் மூலம் பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் தகர்த்து தான் கடலூர் மாவட்ட மக்கள் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றனர்.

கடலூர் மாவட்ட மக்களும் தமிழ்நாடு அரசின் ஆளுகைக்குள் உள்ளவர்கள் தான். அவர்களைக் காக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. எனவே  கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும்  உடல் நலனையும் கருத்தில் கொண்டு  கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கேட்டுக்கொள்ளப்பட்டவாறு  என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்தை அனுமதிக்க முடியாது.

அதற்காக நிலம் கையகப்படுத்தி தரமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!