செய்தி தமிழ்நாடு

சென்னையில் இருந்து சுற்றுலா செல்வதற்கான விமான கட்டணங்கள் உயர்வு!‘

சென்னையில் இருந்து சுற்றுலா செல்வதற்கான விமான டிக்கெட்டுகளின் கட்டணம் அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் மேமாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி சென்னையில் இருந்து ஸ்ரீ நகர் வழியாக டெல்லி செல்ல ஒரு வழி கட்டணம் ரூ.13 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. மேலும்  சென்னையில் இருந்து அந்தமான் செல்ல 8,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விமான டிக்கெட் கட்டணம் அதிகரித்து இருக்கிறது.

சென்னையில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா,  சிங்கப்பூர்.  தாய்லாந்து ஸ்ரீலங்கா,  ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு செல்ல முன்பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்தள்ளன.

இந்த நாடுகளில் இருந்து சென்னை வருவதற்கு சுமார் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும்,  மத்திய கிழக்கு நாடுகளான ஈரான்,  ஈராக், பக்ரைன்,  சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து இந்த நாடுகளுக்கு நேரடி விமான சேவை இல்லாததால்  மற்ற மாநிலங்கள் வழியாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் கூடுதலாக விமான கட்டணம் செலவிட வேண்டி உள்ளது.

 

(Visited 7 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி