தண்ணீர் அதிகமாக குடித்தால் ஆபத்தா? வெளியான முக்கிய தகவல்
மனிதனுக்கு தேவையான அனைத்து உப்புகளும் நாம் அருந்தும் நீரில் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதைப் பற்றி நாம் இந்த பதிவில் வாசிப்போம்..
உடலில் உள்ள தேவையற்ற நீர் சிறுநீராக நமது சிறுநீரகத்திலிருந்து வெளியேறுகிறது. அதிகமாக நாம் தண்ணீர் குடிக்கும் போது ரத்த நாளத்தில் தண்ணீர் அதிகம் சேர வாய்ப்புள்ளது.
உடலில் இருக்கக்கூடிய சோடியத்தின் அளவில் மாற்றம் ஏற்படுகிறது.
தண்ணீர் எப்போது அதிகம் குடிக்க வேண்டும்?
காய்ச்சல் இருக்கும் போதும், கோடை காலங்களிலும், மற்றும் உடல் உழைப்பு அதிகம் செய்யும் போதும், உணவருந்தாமல் விரதம் முறை மேற்கொள்ளும் போதும் அதிக தண்ணீர் குடிக்கலாம்.
உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்து நீங்கள் சரியான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா என அறியலாம்.
அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அர்த்தம். அதாவது உங்கள் உடம்புக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது.
இளம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது இயல்பான அளவை குறிக்கும்.
வெள்ளையாக இருந்தால் நீங்கள் அழகுக்கு மீறில் தண்ணீர் அருந்துகிறீர்கள்.
தாகம் எடுக்கும் போது மட்டுமே தண்ணீர் குடிப்பது மிகவும் சிறந்த முறையாகும். நாம் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தண்ணீரை குடிப்பது மிகவும் தவறு.
ஒரு நாளைக்கு பத்து தடவைக்கு மேல் சிறுநீர் கழித்தால் உங்கள் உடலில் அதிக அளவு தண்ணீர் சேர்ந்துள்ளது.
அதிக அளவு தண்ணீரை எடுத்துக் கொண்டால் ஏற்படும் ஆபத்துகள் :
குமட்டல் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும். மேலும் வயிறு உப்பியது போன்று காணப்படும்.
தண்ணீர் அதிகம் குடிப்பதால் உடலில் உப்பின் அளவு குறைக்கப்படும். இதனால் உடலில் உள்ள செல்கள் இருக்கிற அளவைவிட பெரிதாக வீங்கத் துவங்கும். இதனால் மூளையின் அளவு பெரிதாகும். மூளை அளவு பெரிதாவதால் நாள் முழுவதும் தலைவலியை ஏற்படுத்தும்.
மேலும் எலக்ட்ரோலைட்டின் அளவும் குறைந்து தசை வலியை ஏற்படுத்தும். இளநீரில் அதிக அளவு எலக்ட்ரோலைட்டின் உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு இளநீர் போதுமானது.
தண்ணீர் அதிகம் குடித்தால் சிறுநீரகம் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும். இதனால் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் அதிகம் சுரந்து உடல் சோர்வை ஏற்படுத்தும்.
சோடியத்தின் அளவும் குறைக்கப்படுகிறது. சோடியம் நம் உடம்பில் செல்களுக்கு தகவல்களை நினைவூட்டும் பணியை செய்கிறது.
தண்ணீர் அருந்தும் முறை :
தண்ணீரை நாம் தூங்கி எழுந்து ஒரு டம்ளரும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளரும், சாப்பிட்டு முடித்து 15 நிமிடம் கழித்து ஒரு டம்ளரும், (குறிப்பு உணவு விழுங்குவதற்கு சிரமம் ஏற்பட்டால் அரை டம்ளர் தண்ணீர் குடித்துக் கொள்ளலாம் ) மற்றும் இரவு தூங்கும் போது ஒரு டம்ளர் நீர் குடிப்பது இருதயத்திற்கு மிகவும் சிறந்ததாகும்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அதிக தண்ணீர் குடிப்பதால் வயிற்றில் தொப்பை ஏற்படும். இந்த உலகத்தில் யாருமே நீங்கள் இவ்வளவு தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நிர்ணயிக்க முடியாது, இதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நீங்கள் இருக்கக்கூடிய பருவநிலை உடல் உழைப்பு போன்றவை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். நாம் உடலுக்குத் தேவையான நீரை நம் உடலே தாகம் மூலம் வெளிப்படுத்தும். அப்போது நாம் தாகம் அடங்கும் வரை தண்ணீர் எடுத்துக் கொள்வதே உடல் ஆரோக்கியத்திற்கு போதுமானதாகும்.
” நீரின்றி அமையாது உலகு” நம் உடலுக்கும் இது பொருந்தும். தண்ணீர் நம் உடலுக்கு மிக மிக அவசியமானது. அதை நாம் சரியான முறையில் எடுத்துக் கொண்டால் பலவித பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.