ஜெருசலேமில் ராணுவ வீராங்கனை மீது கத்திக்குத்து தாக்குதல்: பாலஸ்தீனியர் ஒருவர் சுட்டுக்கொலை
கிழக்கு ஜெருசலேமில் ராணுவ வீராங்கனை மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீன நாட்டவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இன்று, கிழக்கு ஜெருசலேமிலுள்ள Shalem என்னுமிடத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்த ஒருவர், பெண் ராணுவ வீராங்கனைகளை கத்தியால் குத்தியுள்ளார்.
அதில், ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார், மற்றொரு பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 20 வயதுள்ள அந்த பெண்கள் இருவருக்கும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவரை இஸ்ரேல் எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். அவர், Issawiya என்னுமிடத்தைச் சேர்ந்த பாலஸ்தீன இளைஞர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடந்த இடத்துக்கு அருகில், சந்தேகத்துக்குரிய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் பொதுமக்கள் அனுமதியில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.