ஐரோப்பா செய்தி

ஆயுதங்களின் களஞ்சியமாகும் ஐரோப்பா : வெளியாகிய அதிர்ச்சி அறிக்கை!

உக்ரைனுக்கும் – ரஷ்யாவிற்கும் இடையிலான போர் நிறைவுப்பெற்ற பின் அங்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுக்கு என்ன நடக்கும் என்று நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான உலகளாவிய முன்முயற்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்து அறிக்கையில், தற்போதைய போர் முடிவடையும்போது உக்ரைனின் போர்க்களங்கள் அராஜகத்தின் புதிய ஆயுதக் களஞ்சியமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்காவில் உள்ள கிளர்ச்சியாளர்கள் முதல் ஐரோப்பாவில் உள்ள குண்டர்கள் வரை அனைவரையும் ஆயுதபாணியாக்கும் எனவும் அந்த அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

போரின் தொடக்கத்தில் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி நாட்டை காக்க விரும்பும் எவருக்கும் ஆயுதங்களை வழங்குவதாக கூறினார்.

இதன்படி முதல் இரண்டு நாட்களில் மட்டும் 25 ஆயிரம் தானியங்கி துப்பாக்கிகள், 10 மில்லியன் தோட்டாக்கள், மற்றும் அறியப்படாத எண்ணிக்கையிலான ரொக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகள், ஏவுகணைகள் என்பன பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதாக உக்ரைனின் மறைந்த உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி தெரிவித்திருந்தார்.

இவையொருப்புறம் இருக்க ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தப்பின் கைவிடப்பட்ட ஆயுதங்களும் மக்கள் கைகளில் கிடைத்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைன் ஆயுதக் களஞ்சியமாகும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி