வாழ்வியல்

அரிசி சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள் – உங்களுக்கான பதிவு

நம்மில் பலருக்கு அரிசியை பச்சையாக சாப்பிடும் பழக்கம் உள்ளது, அதாவது வெறும் வாயில் எதையாவது மென்று கொண்டிருக்கும் பழக்கம் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு தான் இந்த பழக்கம் அதிகம் உள்ளது குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்பு மற்றும் எவ்வாறு நிறுத்துவது என இந்த பதிவில் பார்ப்போம்..

சமைக்கும் போதும் மாவு அரைக்கும் போதும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போதும் இந்த அரிசியை சாப்பிடும் பழக்கம் ஏற்படுகிறது. சில பேர் டைம்பாஸுக்காக கூட இந்த அரிசியை சாப்பிடுகிறார்கள். முதலில் இது சாதாரணமாகத்தான் ஆரம்பிக்கிறது ஆனால் போகப் போக இதைவிட முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.

Benefits of Eating Raw Rice | Raw Rice Should be Eaten or Not | Raw Rice

பாதிப்புகள்:
வேக வைக்காத அரிசியில் செல்லுலோஸ் என்ற பொருள் உள்ளது. இந்த செல்லுலோஸ் எளிதாக ஜீரணம் ஆகாது. மேலும் இந்த செல்லுலோஸ் நல்ல பாக்டீரியாக்களை அழிக்கிறது. பயிர் விளையும் போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் சில கெட்ட கிருமிகளும் இந்த வேக வைக்காத அரிசியில் உள்ளது. இதை நாம் கொதிக்க வைத்து உண்ணும் போது அதில் உள்ள வேதிப்பொருட்கள் அளிக்கப்படுகிறது. ஆனால் பச்சையாக சாப்பிடும் போது உடல் நலத்தில் பல பாதிப்புகளையும், பற்களில் பாதிப்புகளையும் ஏற்படுகிறது.

செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வதை தடுக்கிறது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோவையும் ஏற்படும். இதை நாம் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் ஹீமோகுளோபின் அளவு5-6 வரை குறைக்கப்படுகிறது.

Is It Safe To Eat Raw Rice?

பற்கள்:
இந்த அரிசியை நாம் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது பற்களுக்கு இடையே மாட்டிக்கொள்ளும், வாய் கொப்பளித்தாலும் வெளியே வராத நிலை ஏற்படுத்தும். மாவு பொருள் இதில் அதிகம் இருப்பதால் பல் சொத்தை ஏற்படுத்தக்கூடிய கிருமிகளுக்கு நல்ல உணவாக அமைகிறது. இந்த கிருமிகள் பற்களின் மேல் ஒரு அமிலத்தை ஏற்படுத்தி பற்களை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து பல் சொத்தையை ஏற்படுத்துகிறது.

பல நாட்களாக நாங்கள் இதை சாப்பிடுகிறோம் ஆனால் எந்தப் பிரச்சனையும் வரவில்லை என்று நினைப்பீர்கள் இதன் விளைவு உடனே தெரியாது. தொடர்ந்து நாம் எடுத்து வரும்போது நல்ல பேக்டீரியாக்கள் அழிக்கப்படுகிறது படிப்படியாக அதன் திறனை குறைத்து குடல் புற்று நோயை கூட ஏற்படுத்தும்.

Raw Rice Bag, 50% OFF | ena.laatech.net

இது பைக்கா நோயின் அறிகுறி ஆகும். பைக்கா என்பது நல்லது இல்லை என தெரிந்தும் சாப்பிடுவது. மேலும் தலை முடி பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். அரிசி சாப்பிட தோணும் போது நாம் சத்து நிறைந்த தின்பண்டங்களை சாப்பிட்டு வரலாம், அதாவது பட்டாணி, பொட்டுக்கடலை, நிலக்கடலை, எள்ளுருண்டை போன்றவற்றை தொடர்ந்து 48 நாட்கள் எடுத்துக் கொண்டால் விரைவில் இதிலிருந்து வெளியே வரலாம்.

அரிசி சாப்பிட்டால் கல்யாணத்தில் மழை வரும் என்று நம் முன்னோர்கள் முன்னோர்கள் கூறுவார்கள். இப்படி சொன்னால் தான் சாப்பிட மாட்டார்கள் என்று கூறினார்கள். ஆனால் அதன் பின்னால் இவ்வளவு காரணங்கள் இருக்கிறது என அரிசி பிரியர்கள் கவனத்தில் கொண்டு அதை எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான
error: Content is protected !!