Apple பொருட்களின் விற்பனையில் ஏற்பட்ட பாரிய சரிவு!
Apple பொருட்களின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தொடர்ந்து 4ஆம் காலாண்டாகச் சரிந்துள்ளதுடன் நிறுவனத்தின் வருவாய் 89.5 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளத.
அதன் வரிக்குப் பிந்திய இலாபம் 23 பில்லியன் டொலராகும். கடந்த ஆண்டை விடவும் அது குறைவாகும்.
கொஞ்சம் குறைவு.
4ஆம் காலாண்டில் iPhone கையடக்க தொலைபேசிகளின் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டதாக Apple நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் கூக் (Tim Cook) தெரிவித்தார்.
ஆனால் Apple Music, iCloud போன்ற சேவைகள் மூலம் ஈட்டப்படும் பணம் இதுவரை இல்லாத அளவு சரிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையே உலக அளவில் திறன்பேசிகளின் விற்பனை குறைந்திருப்பதாக Counterpoint நிறுவனம் தெரிவித்தது.
iPhone கையடக்க தொலைபேசிகளின் விற்பனை அதிகரித்திருக்கிறது. எனவே அந்தப் போக்கு மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.