ஐரோப்பா

பிரான்ஸில் தடுப்பூசியினால் உயிரிழந்த சிறுவன்

பிரான்ஸில் தடுப்பூசியினால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி 12 வயதுடைய ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவர்தடுப்பூசியினை போட்டுக்கொண்டார். அதன் பின்னர் இருக்கையில் அமர்ந்த அவர், திடீரென உடல்நலக்குறைவுக்கு உள்ளானார். பின்னர் மாணவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அடுத்து அங்கு அவர் உயிரிழந்தார்.

அதையடுத்து, பிரான்சின் சுகாதார அமைச்சர் சிறுவனது இழப்புக்கு தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிறுவனது சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தியதில், தடுப்பூசியின் ஒவ்வாமையே மரணத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

தடுப்பூசியால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக இந்த வகையான அசௌகரியம் ஏற்படலாம், ஆனால் தடுப்பூசி தயாரிப்பு அல்லது தடுப்பூசியின் தரக் குறைபாடு ஆகியவற்றுடன் தொடர்பில்லாதது என பிராந்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!