தென் கொரியாவிலிருந்து இலங்கைக்கு கிடைத்த நல்ல செய்தி
இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரை முன்னிட்டு, இருநாட்டு அரச தலைவர்களும் நியூயோர்க்கில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன், தென்கொரிய ஜனாதிபதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. .
நீண்ட காலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்த கலந்துரையாடல்கள் உதவும் என தென்கொரிய ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கலந்துரையாடப்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் தென்கொரிய ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை தொடர்பில் தென் கொரியா வழங்கிய தொழில் பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் காலநிலை மாற்றத்தை தணிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதும் உள்ளடங்குவதாகவும் தென்கொரிய ஜனாதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.