இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்!! இரண்டாவது இலங்கையர் உயிரிழப்பு
இஸ்ரேலில் பணியாற்றிய போது பல வாரங்களாக காணாமல் போயிருந்த சுஜித் பண்டார உயிரிழந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களால் உயிரிழந்த இரண்டாவது இலங்கையர் சுஜித் பண்டார ஆவார்.
இதேவேளை, காஸா பகுதியின் மையப்பகுதியாக இருந்த காஸா நகரம் இஸ்ரேலிய படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலின் பின்னர் இஸ்ரேலில் தாதியர் ஊழியராகப் பணியாற்றிய இலங்கையர் சுஜித் பண்டார காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், சுஜித் பண்டாரஹமாஸ் போராளிகளின் பணயக்கைதியாக இருக்கலாம் என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு கடந்த 31ஆம் திகதி தெரிவித்திருந்தது.
எனினும் அவர் சுஜித் பண்டார உயிரிழந்துள்ளதாக DNA மாதிரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் சமய சடங்குகள் மற்றும் இறுதி மரியாதைகளின் பின்னர் அவரது உடல் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கையைச் சேர்ந்த அனுலா ஜயத்திலக்க என்ற பெண்ணும் இஸ்ரேல் – ஹமாஸ் போரின் போது கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரஃபா நுழைவாயில் வழியாக எகிப்தை வந்தடைந்த அவர்கள் தற்போது அந்நாட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
காஸாவில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கு இடையே 28வது நாளாக மோதல் நீடித்து வருகிறது.