அணு ஆயுத சோதனைகளை தடை செய்யும் ஒப்பந்தம்: கையெழுத்திட்ட விளாடிமிர் புடின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தின் (CTBT) ஒப்புதலை ரத்து செய்துள்ளார்.
இந்த சட்ட திருத்தத்திற்கு ஏற்கனவே ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவை அனுமதிய அளித்திருந்த நிலையில், கீழவையிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.
இது மாஸ்கோவை அமெரிக்காவிற்கு இணையாக கொண்டு வர வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
1996 ஒப்பந்தம் அணு ஆயுதங்களின் நேரடி சோதனைகள் உட்பட அனைத்து அணு வெடிப்புகளையும் தடை செய்கிறது, இருப்பினும் சில முக்கிய நாடுகள் அதை அங்கீகரிக்காததால் அது ஒருபோதும் பயனுள்ளதாக இல்லை.
மேலும் இந்த விவகாரத்தில், அமெரிக்காவின் நிலையை பின்பற்றியே ரஷ்யா இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவைத் தவிர, சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா, இஸ்ரேல், ஈரான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளால் CTBT இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.