அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிகரிக்கும் குழந்தைகளின் மரணங்கள்
அமெரிக்காவில் பிஞ்சுக் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டில் 3 சதவிகிதம் இந்த இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த இருபது ஆண்டுகளில் இதுவே மிக அதிகம் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
முப்பத்தேழு வாரங்கள் அல்லது அதற்கும் முன்பாக பிறக்கும் வெள்ளை மற்றும் கறுப்பினக் குழந்தைகள் குழந்தைகளின் இறப்பு காரணமாகவே இந்த அளவுக்கு இறப்பு விகிதம் அதிகரிக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது.
குழந்தைப் பிறப்பில் நேரிடும் சிக்கல் மற்றும் பாக்டீரியா மூளைக்காய்ச்சல் காரணமாகவே பெரும்பாலான பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழக்க நேர்ந்திருக்கின்றன.
(Visited 11 times, 1 visits today)





