ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றின் 8வது அலை – சுகாதார பிரிவினர் எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றின் 8வது அலை உருவாகி வருவதாக சுகாதாரத் துறைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கடந்த காலத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 23.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
திட்டமிட்டபடி தினசரி தடுப்பூசி செயல்முறைகள் நடைபெற்று வந்த போதிலும், ஆஸ்திரேலியாவில் கொரோனா அபாயம் நீங்கவில்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அக்டோபர் 24 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில், 6,550 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு நாளைக்கு சராசரியாக 936 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன.
பதிவான நோயாளிகளில், 1,245 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 31 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கொரோனா வைரஸின் பிறழ்ந்த மாறுபாடுகள் தொடர்ந்து உருவாகலாம் என்றும் மக்கள் சரியான சுகாதார பாதுகாப்பு உத்திகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதாரத் துறைகள் வலியுறுத்தியுள்ளன.