காசாவில் புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள நோயாளர்களை அழைத்துச் செல்ல துருக்கி விருப்பம்!
காசாவில் உள்ள மருத்துவமனையில் இருந்து புற்றுநோய் நோயாளர்களை அழைத்துச் செல்ல துருக்கி தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காசா பகுதியில் உள்ள ஒரே புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையாக இருந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுவீச்சி தாக்குதல்களை நிகழ்த்தியுள்ள நிலையில், துருக்கி மேற்படி அறிவித்துள்ளது.
இது குறித்து X தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சர் கோகோ, தேவையான ஒருங்கிணைப்பு செய்யப்பட்டால், புற்றுநோய் நோயாளிகள் மற்றும் அவசர உதவி தேவைப்படும் மற்றவர்களையும் துருக்கிக்கு கொண்டுச் செல்ல தயார் எனக் கூறப்பட்டுள்ளது.
“சர்வதேச சமூகமும் தொடர்புடைய நிறுவனங்களும் துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனை மீதான தாக்குதல்களைத் தடுக்க போதுமான முன்முயற்சியை எடுக்கவில்லை. நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவது இப்போது தப்பிக்க முடியாத கடமையாகும் என்றும் கோகோ தெரிவித்துள்ளார்.