இலங்கை செய்தி

சம்மந்தன் தொடர்பில் கவனம் கொள்ளத் தேவையில்லை – டக்ளஸ்

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக அலட்டிக் கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழரசுக் கட்சியின் விவகாத்தினை அந்தக் கட்சி சார்ந்தவர்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த பொதுத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்ற கருத்து தொடர்பில், ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருக்கும் மனோநிலையை கைவிட்டு, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உளப்பூர்வமான செயற்பாட்டை வெளிப்படுத்த முன்வராத வரையில், அவ்வாறான கட்சிகளுக்கு தலைவராக யார் செயற்பட்டாலும், ஏமாற்றத்தை தவிர வேறு எதுவும் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை.

ஏனெனில், எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத் தருகி்ன்றவர்களாக அரசியல் பிரதிநிகள் இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது எனவும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தன், மூப்புக் காரணமாக பதவி விலக வேண்டும் என்ற கருந்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பொதுவெளியில் வெளியிட்டமை பேசுபொருளாக மாறியுள்ள போதிலும், குறித்த கட்சியை சேர்ந்த பெரும்பாலானவர்களின் நிலைப்பாடும் சுமந்திரன் எம்.பி.யின் கருத்தை ஒத்ததாகவே இருப்பதாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!