கோவிலுக்கு செல்லும் பெண்களிடம் கைவரிசையை காட்டி வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர் கைது
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் கேதார கௌரி விரத ஆலய வழிபாட்டுக்கு செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை இன்று புதன்கிழமை (01) கைது செய்ததுடன் அவரிடமிருந்து 10 பவுண் தங்க ஆபரணங்கள், கைப்பைகள், அலைபேசிகள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றை மீட்டுளளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் ஆலைய வழிபாட்டிற்கு செல்லும் பெண்களை குறிவைத்து அவர்களிடமிருந்து தங்க ஆபரணங்கள் கையடக்க அலைபேசிகள் என்பற்றை விழிப்பறி செய்துவந்த நிலையில் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலமையிலான பொலிசார் யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த 28 வயதுடைய கொள்ளையனை சம்பவதினமான இன்று மடக்கிபிடித்து கைது செய்தனர்
இதில் கொள்ளையிட்ட 10 பவுண் தங்க ஆபரணங்;கள், 7 கையடக்க அலைபேசிகள், கைப்பைய்கள், மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டதுடன் இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.