இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை நிறுத்தும் பொலிவியா!
காஸா பகுதியில் இடம்பெற்று வரும் “கடுமையான இராணுவ நடவடிக்கைகள்” காரணமாக இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை நிறுத்த பொலிவியா முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பொலிவியாவின் துணை வெளிவிவகார அமைச்சர் ஃப்ரெடி மாமணி, தனது நாடு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும், முற்றுகையிடப்பட்டுள்ள காசா பகுதிக்கு தேவையான பொருட்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கடுமையான போர் சூழல் காரணமாக இஸ்ரேலுடனான உறவை துண்டித்த முதல் லத்தீன் அமெரிக்க நாடாக பொலிவியா காணப்படுகிறது.
இதற்கிடையில், கொலம்பியா மற்றும் பிரேசில் ஜனாதிபதிகள் காசா பகுதியில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளனர்
(Visited 11 times, 1 visits today)





