பிரித்தானியாவில் நடைபெறும் AI பற்றிய முதல் உச்சிமாநாடு!
பிரித்தானியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய முதல் உச்சிமாநாட்டு நடைபெறவுள்ள நிலையில், இதற்காக உலகெங்கிலும் உள்ள கல்வியலாளர்கள், தொழில் வல்லுனர்கள், அழைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த உச்சிமாநாடானது இவ்வாரத்தின் இரு நாட்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி ரிஷி சுனக், அமெரிக்கத் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
இதற்கு முன்பதாக ஏஐ தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்திருந்த நிலையில், இதற்கான தீர்வை கண்டுப்பிடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)