தென்சீன கடலில் ஏற்பட்ட பரபரப்பு : அமெரிக்க போர் விமானத்தை இடைமறித்த சீன விமானம்!

தென் சீனக் கடலில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க B-52 குண்டுவீச்சு விமானத்தின் 10 அடி தூரத்தில் சீனப் போர் விமானம் வந்த நிலையில், சிறிய இடைவெளியில் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
ஷென்யாங் ஜே-11 என்ற இரட்டை எஞ்சின் கொண்ட போர் விமானம் அமெரிக்க விமானப்படை விமானத்தை “கட்டுப்பாட்டு அதீத வேகத்தில் பறந்த நிலையில், பாரிய விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என அமெரிக்க இந்தோ பசுபிக் கட்டளை தெரிவித்துள்ளது.
கருத்துக்கான கோரிக்கைக்கு சீனாவின் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
தென்சீனக் கடலின் பெரும்பகுதியை அதன் பிராந்திய நீர்நிலைகள் என சீனா தனது உரிமைகோரல்களை முன்னெடுத்துச் செல்கிறது.
சீனாவின் கூற்றுக்கள், உலகின் பரபரப்பான வர்த்தகப் பாதைகளில் ஒன்றான தென் சீனக் கடலில் உள்ள மற்ற நாடுகளுடன் நீண்டகாலமாக நிலப்பரப்பு மோதல்களுக்கு வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.