இலங்கையின் பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்பு
இலங்கையின் பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
25 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நால்வரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படக்கூடும் என இலங்கை தேசிய பக்கவாத சங்கத்தின் தலைவர் நரம்பியல் நிபுணர் வைத்தியர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார்.
பக்கவாதத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் இயக்குநரகத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஷெரீன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
உலக பக்கவாதம் தினம் அக்டோபர் 29 அன்று அனுசரிக்கப்படுகிறது. நோய் தடுப்பு என்பது இந்த ஆண்டு அதன் கருப்பொருள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 1 visits today)