இலங்கை

யாழ்- கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அலுவலகத்தில் நவாலி கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 54 குடும்பங்களுக்கான காணி உரிமைப் பத்திரம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தவால் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், காணி மேலதிக அரசாங்க அதிபர் ஶ்ரீமோகன், மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்தன் குணதிலாக மற்றும் துறைசார் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்