ஈரானில் பெண் நடிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

இஸ்லாமிய குடியரசின் கடுமையான ஆடைக் குறியீட்டைக் கடைப்பிடிக்கத் தவறியதற்காக ஈரானிய அதிகாரிகள் ஒரு டஜன் பெண் நடிகர்களுக்கு வேலை செய்யத் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“சட்டத்தைப் பின்பற்றாதவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று ஈரானின் கலாச்சார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சர் முகமது மெஹ்தி எஸ்மாலி வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் கடுமையான ஆடைக் கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது. கடந்த வருடம் 22 வயதான மஹ்சா அமீனி ஆடை கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டில் காவலர்களால் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இது ஈரான் முழுவதும் பரவலான போராட்டங்களுக்கு வழிவகுத்ததுடன், சர்வதேசத்தின் கவனத்தையும் பெற்றிருந்தது.
(Visited 10 times, 1 visits today)