ஐரோப்பா செய்தி

போருக்கு மத்தியில் ரஷ்யா புறப்பட்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக வரும் திங்கள்கிழமை ரஷ்யா செல்கிறார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அழைப்பை ஏற்று அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யா செல்ல உள்ளார். வரும் 20ம் திகதி ரஷ்யா செல்லும் அதிபர், வரும் 23ம் திகதி அங்கிருந்து சீனாவுக்கு திரும்புகிறார் என்று தெரிவித்தார்.

இந்தப் பயணத்தின்போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர புதினுக்கு ஜி ஜின்பிங் அழுத்தம் கொடுப்பாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஹூவா சுன்யிங், பேச்சுவார்த்தைதான் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என்பதில் சீனா நம்பிக்கை கொண்டிருக்கிறது என்றார்.

(Visited 10 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி