CWC – 382 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ஹென்ரிக்ஸ் 12 ரன்களை எடுத்த போது அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
இவரைத் தொடர்ந்து வந்த டுசென் 1 ரன்னில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய டி காக் பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தார். இவர் 174 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் மார்க்ரம் தன் பங்கிற்கு 60 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார். அதன்படி 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 382 ரன்களை குவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணியின் டேவிட் மில்லர் 34 ரன்களுடனும், மார்கோ யென்சென் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
வங்காளதேசம் அணி சார்பில் ஹசன் 2 விக்கெட்டுகளையும், மெஹிடி ஹசன் மிராஸ், ஷொரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஷகிப் அல் ஹாசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.