8 லட்சம் அரசு ஊழியர்களுக்கு வாழ்வாதார நெருக்கடி
14 மாத காலப்பகுதியில் மின்சார கட்டணம் 400 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், இதனுடன் ஒப்பிடும் போது அரச ஊழியர்களின் சம்பளம் எந்த காலத்திலும் அதிகரிக்கப்படவில்லை எனவும் அரச மாகாணங்கள் மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
நீர், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலையேற்றம் காரணமாக 8 இலட்சம் அரச ஊழியர்கள் பிழைப்பு நெருக்கடியில் உள்ளனர்.
இதேவேளை, களப்பணி, போக்குவரத்து செலவு, வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு, எரிபொருள் விலை மற்றும் மோட்டார் சைக்கிள் பராமரிப்பு செலவுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படாமைக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் நாளை அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.