பிரான்ஸில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை!
பிரான்ஸ், தலைநகரைச் சுற்றியுள்ள விமான நிலையங்கள் மற்றும் ரயில்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பை அதிகரிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
பாரிஸ் விமான நிலையங்களில் பாதுகாப்பு ரோந்துகள் 40% அதிகரிக்கப்படும் என்றும் தேசிய ரயில்வே நிறுவனமான SNCF இன் ஊழியர்கள் 20% கூடுதல் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் வடக்குப் பகுதியில் உள்ள அராஸ் நகரில் 20 வயது இளைஞன் ஒரு ஆசிரியரைக் கத்தியால் குத்தியதை அடுத்து, அக்டோபர் 13-ஆம் திகதி முதல் பிரான்ஸ் அதிக உஷார் நிலையில் உள்ளது.
இதனையடுத்து பிரான்ஸ் முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 8 times, 1 visits today)