தனியார் வாகன இறக்குமதி – தடை நீக்குவது சாத்தியமில்லை
தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்வரும் காலங்களில் நீக்குவது சாத்தியமில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தனியார் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தவிர்ந்த அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் மதிப்பீடு மற்றும் நிபுணர்களின் கருத்தின்படி, உள்நாட்டு சந்தையில் போதுமான வாகனங்கள் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வாகனங்களின் தேவை, எரிபொருள் மற்றும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய மீளாய்விற்கமைய, தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடை நீக்கப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.